சீனத்தூதுவரை அழைத்து விளக்கம் கோருவதற்கான தேவைப்பாடு இல்லை என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டிவீதம் உள்ளிட்டவிடயங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சீனத்தூதுவர் வெளியிட்டிருந்தார்.
இதனை அடுத்து அவர் அழைக்கப்பட்டு விளக்கம் கோரப்படவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் இதனை பதில் அமைச்சர் மறுத்துள்ளார்.
அதேநேரம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர், சீனத் தூதருடன் நட்பு ரீதியாக தொலைபேசியில் இந்த விடயம் தொடர்பில் பேசி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.