மைத்திரியின் வசதிகளை நீட்டிப்பதற்காக 6 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு!

286 0

புதிய அரசாங்கத்தின் செலவுகளுக்காக கடந்த டிசம்பர் மாதத்திற்கு மட்டும் 2736 கோடியே 44 இலட்சம் ரூபாய் குறை நிரப்பு பிரேரணையாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இக்குறை நிரப்பு பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வசதிகளை நீட்டிப்பதற்காக 6 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாயும் பாதுகாப்பு அமைச்சின் பலவித தேவைகளுக்காக 128 கோடியே 25 இலட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் திணைக்களம் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு 4 கோடியே 49 இலட்சம் ரூபாயும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வசதிகளை நீடிப்பதற்காக 6 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை புதிதாக நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சருக்கான வாகனப் பராமரிப்பு, எரிபொருள் விநியோகம், சம்பளங்கள் மற்றும் வேதனங்கள், அலுவலக உபகரணங்கள் என்பனவற்றுக்கான மேலதிக ஒதுக்கீடாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தக்குறை நிரப்பு பிரேரணையில் அதிகமான நிதி அரசதுறை ஊழியர்களுக்கு மாதம் 2500 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு வழங்குகின்ற 152 ஆவது வரவு செலவுத்திட்ட முன்மொழிவினை செயற்படுத்துவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.