இலங்கை இந்திய அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ் நாட்டு மீனவ சங்கங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஐந்தாம் திகதி டெல்லியில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் பேசப்பட்டதுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையில் இணைந்த செயற்குழுவையும் அவசர அழைப்பு சேவையையும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இதனால் தங்களின் பிரச்சினைகள் தீரப் போவதில்லை என்று, தமிழக மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன.
குறித்த பேச்சுவார்த்தை மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இறுதியில் அதிருப்தியே ஏற்பட்டதாக சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.