மஹிந்தவுக்கு ஜீ.எல். அழைப்பு

299 0

mahindaமுன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு தலைமை தாங்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சியில் மகிந்தவை இணைத்துக் கொள்ள கூடுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரையில் இந்த கட்சியில் இணைவது குறித்து மஹிந்த எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

ஆனால் தங்களின் அழைப்பை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருக்கிறது என்று பீரிஷ் கூறியுள்ளார்.

த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.