16 பேர் கொண்ட கோப் குழு – அங்கத்தவர்களின் பெயர்களை அறிவித்தார் சபாநாயகர்

260 0

16 பேர் கொண்ட கோப் குழுவில் உள்ளடங்கும் அங்கத்தவர்களின் பெயர், விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) பகல் ஆரம்பமாகியது. இதன்போதே சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த தகவலை வெளியிட்டார்.

அதன்படி அமைச்சர்கள் அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம ஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, ஜயந்த சமரவீர, மொஹான் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோர் கோப் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

அவ்வாறே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், விஜயதாச ராஜபக்ஷ, ஹர்ஷ டி சில்வா, அஜித் பி பெரேரா, சிறியானி விஜேவிக்ரம, ரஞ்சன் ராமநாயக்க, அசோக் அபேசிங்க, சுனில் ஹந்துநெத்தி, மாவை சேனாதிராஜா மற்றும் டி.வி.சானக்க ஆகியோர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.