டிரான் அலசை விடுவிக்க உத்தரவு

300 0

tiran_alles1முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை விடுவிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 2ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக டிரான் அலஸினால் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இதனை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்புக்கான நிதியில் ராடா நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.