முச்சக்கரவண்டியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த பெண் பலி

266 0
பிபில- மஹியங்கன பிரதான வீதியின் ஹேபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்டுனர் பயிற்சி செய்வதற்காக பயன்படுத்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த பெண் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

4 நாட்களுக்கு முன்னர் நிச்சயதாரத்தம் செய்து கொண்ட மஹியங்கன, ரிதிமாலியந்த பகுதியை சேர்ந்த 26 வயதுடைய உமேசி சசின்தனா எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.