மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்திருந்தனர்.
உள்ளுராட்சி தேர்தல்கள் தாமதிக்கப்படுகின்றமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, எல்லை நிர்ணய விடயத்தை வைத்து தொடர்ந்தும் உள்ளுராட்சி தேர்தல்களை அரசாங்கத்தினால் பிற்போட முடியாது என்று தெரிவித்தார்.