இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடு திரும்பினார்.
இரண்டு நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இந்தியா சென்றிருந்தார்.
அங்கு நடைபெற்ற புகைப்பிடித்தல் பொருட்களுக்கு எதிரான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே இந்த விஜயம் இடம்பெற்றது.
இந்த விஜயத்தின் போது அவர் இந்திய ஜனாதிபதி உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
அத்துடன் பல்வேறு பௌத்த ஸ்தளங்களுக்கும் விஜயம் செய்திருந்தார்.