முன்னாள் அமைச்சர்களான சந்திரசேகரன் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் தொடர்பில் பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறையற்ற பிரசாரம் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சௌமிய இளைஞர் நிலையத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.பி.அந்ததோனிமுத்து நேற்று இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
குறித்த அமைச்சர்களை கொச்சைப் படுத்தும் வகையில் முகநூலில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளரால் உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.