இந்திய இலங்கை இராணுவக் கூட்டுப் பயிற்சி நிறைவு

489 0

silkroadஇந்திய இலங்கை இராணுவக் கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது.

மித்ர சக்தி 2016 என்ற பெயரிலான இந்த பயிற்சிகள், அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சிகள் கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் கடந்த 6ஆம் திகதி வரையில் நடைபெற்றது.

இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினர் செயற்படு திறன் விருத்தி, எதிர்தாக்குதல் மற்றும் தீவிரவாத தடுப்பு செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.