தஞ்சைக்கு தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் இன்று வந்தனர். மேலும் துணை ராணுவத்தினரும் தஞ்சை வர உள்ளனர்.
தஞ்சைக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.தஞ்சை தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தஞ்சை தொகுதியில் 88 இடங்களில் 276 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் 256 மையங்கள் நகர் புறங்களிலும், 20 மையங்கள் கிராமப்புறங்களிலும் அமைய உள்ளது.
இதில் 17 மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவை 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.
தஞ்சை தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் இன்று வந்தனர். முதல் கட்டமாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 32-வது பட்டாலியனை சேர்ந்த 80 பேர் ரெயில் மூலம் கூடுதல் கமாண்டோ சைதன்யா தலைமையில் இன்று தஞ்சை வந்தனர்.
அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நாளை மறுநாள் முதல் அவர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் துணை ராணுவத்தினரும் தஞ்சை வர உள்ளனர்.