யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார தொழிலாளர்களினால் நிரந்தர நியமனம் வழங்ககோரி, யாழ்ப்பாண மாநகரசபைக்கு முன்னால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
வடபிராந்திய ஜக்கிய தொழிலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்.மாநகர சபையில் பணியாற்றும்; 127 தற்காலிக சுகாதார தொழிலாளர்களினாலேயே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து தற்காலிக ஊழியராக கடமையாற்றிவரும் இப் பணியாளர்ளுக்கு இன்றுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனவும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரியுமே இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.