எரிட்ரியா நாட்டில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
எரிட்ரியா வடகிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு எத்தியோப்பியா, சூடான், ஜிபோயுடி ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது. இந்நாட்டில் தங்கத்தை வெட்டி எடுக்க பல்வேறு பகுதிகளில் சுரங்கள் அமைந்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் தென்கிழக்கு எல்லையில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்தில் இன்று 34-பேர் தங்கத்தை வெட்டி எடுக்கும் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்த மண் திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கித்தவித்த 15 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். ஆனால் இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை எனவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.