விரைவில் மக்களுக்கு நல்லது செய்ய உங்கள் அனைவரையும் தேடி வருவேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டு விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோர் வந்தனர். அப்போது விஜயகாந்த் பேசும்போது, “உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் விரைவில் மக்களுக்கு நல்லது செய்ய உங்கள் அனைவரையும் தேடி வருவேன்” என்றார்.
இன்று எங்களது 30-ம் ஆண்டு திருமணநாள் அதை உங்கள் முன்னிலையில் கொண்டாட முடிவு செய்தோம். அதன்படி எங்களது உண்மையான குடும்பமான தொண்டர்கள் முன்னிலையில் கொண்டாடுவது மிகவும் சந்தோஷம். வெகு விரைவில் ஊர் ஊராக வந்து விஜயகாந்த் பிரசாரம் செய்வார்.
தமிழகத்தின் முதன்மையான கட்சியாக தே.மு.தி.க. திகழும், கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க. தான். அதற்காக குட்ட குட்ட குனிந்து வாங்கும் ஜாதி அல்ல. வருகிற 2021-ல் தலைவர் கேப்டன் தலைமையில் ஆட்சி அமையும் என்று நாம் உறுதி ஏற்போம்.
இனி என்றும் எங்களுக்கு வளர்பிறை தான். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக தே.மு.தி.க. விரைவில் வரும்.
எல்.கே. சுதிஷ் பேசியதாவது:-
1996-ல் முதல் முறையாக கேப்டன் மன்றத்தின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாம். அடுத்து 2001-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 10 சதவீதம் இடங்களில் வெற்றி பெற்றோம்.
தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தேர்தலில் போட்டியிட்டு உள்ளோம். மீண்டும் மற்ற மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிகளவில் வெற்றி பெறுவோம்” என்றார்.
நிகழ்ச்சியில் விஜயகாந்த் மகன்களான இளை ஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன் ராஜ், துனை செயலாளர்கள் எல்.கே சுதிஷ், பார்த்தசாரதி, அக்பர், மாவட்ட செயலாளர் போரூர் தினகர், பகுதி செயலாளர்கள் சதிஷ்காந்த், லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.