யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா கும்பல் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களும் களையப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை ஆவா குழுவுடன் இராணுவத்திற்கு தொடர்பிருப்பதாக அனைத்துத் தரப்பினரும் சந்தேகம் வெளியிட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.