கொரோனா வைரஸ் தொற்றையும் எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக சர்வதேச சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதானி டொக்டர் ரஷியா பென்சே தெரிவித்துள்ளார்.
´எட் ஹைட் பார்க்´ வழங்கிய பிரத்தியேக பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இதற்காக சர்வதேச சுகாதார அமைப்பு இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகிறது.
இலங்கை சுகாதார அமைச்சும் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதேபோல், தொற்று நோய்கள் பரவுவதை கண்காணிக்கவும், அதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் உலக சுகாதார நிறுவனம் இலங்கையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.