நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யாராவது தான்தோன்றிதனமாக நடந்துக்கொள்வார்கள் என்றால் அது நாட்டு மக்களையை பாதிக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், ஊடகங்களின் ஊடாகவே அதனை தான் அறிந்துகொண்டதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.
நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினர்களை நீக்கி புதியவர்களை இணைத்துக்கொள்வது தனிப்பட்ட நபரினால் முன்னெடுக்கப்பட கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
களனியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.