யாழ்ப்பாணத்தில் மறைமுக யுத்தம் – முதலமைச்சர்

353 0

vickneswaran-newயாழ்ப்பாணத்தில் தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும், மறைமுகமான யுத்தம் ஒன்றையும் ஒடுக்குமுறை ஒன்றையும் நாம் எதிர்கொள்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் எதனையும் தர அரசாங்கம் தயாராக இருக்கவில்லை.

இப்போதும் அதேபோன்ற ஒரு நிலைதான் காணப்படுகின்றது.

எல்லாம் திறந்துவிடப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டாலும்கூட, மறைமுகமான அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் தொடர்கின்றன.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினரை வடபகுதியில் வைத்துக்கொண்டு மக்கள் எவ்வாறு சுதந்திரமாக நடமாட முடியும்? எப்படித் தொழில் செய்ய முடியும்? இது போன்ற பல்வேறு நெருக்கடிகள் எம் மத்தியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் திணிக்கப்பட்டுள்ளன எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.