நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முதலில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை குழப்புவதற்கு பல சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் என்ன தடைகள் வந்தாலும் நல்லிணக்கத்தை அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.