பள்ளிவாசல் மீது தாக்குதல் – உடன் நடவடிக்கை வேண்டும் – கிழக்கு முதலமைச்சர்

350 0

east-cmகுருநாகல் நிக்கவெரட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையானது அமைதியை சீர்குலைக்கும் மிக மோசமான செயற்பாடு என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று நல்லாட்சி நிலவுகின்றது.

இதனை தடுக்க பலர் பலவிதமான கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

எனவே இப்படியான விஸமத்தனமான செயல்களைப் பொறுக்க முடியாத சிறுபான்மை மக்களே கடந்த அரசை வீட்டுக்கு அனுப்பி வைத்தமை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டிய ஒன்றாகும்.
ஆகவே இப்படியான கொடுமைகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

பள்ளிவாயசல்கள், கோயில்கள் தாக்கப்படுதல் சிறுபான்மை மக்களின் காணிகள் சூறையாடப்படுதல், விஸமத்தனமான ஆர்ப்பாட்டங்களால் முஸ்லிம், தமிழ் மக்களைச் சீண்டுதல் ஆகியவற்றை முற்றாகத் தடுக்கும் நடவடிக்கையை இந்த அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

இதனைத் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள அரசு தவறுமாக இருந்தால் அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பது கேள்விக்குறியாகும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.