யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேரில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இராணுவ வீரர் பொறியியல் படைப்பிரிவில் கடமையாற்றி வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த 6 சந்தேக நபர்களில் இராணுவ வீரருக்கு மேலதிகமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், உடுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு, திருநெல்வேலி, கொக்குவில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.