தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

449 0

canada-ambassidor-meetதமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டுமென என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனேடிய அரசாங்கத்தின் வெளிநாட்டு அபிவிருத்தி மற்றும் நலன் மற்றும் திட்டமிடல் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இதனைக் குறிப்பிட்டார்.


தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான தீர்வு கிடைக்காவிட்டால் மத்திய அரசு தமிழ் மக்களை அடக்குகின்ற, செயற்பாடாக இருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

நோர்வே அரசாங்கத்தின் குசேன் குறேசி, மக்லன் இவர்களுடன் இலங்கைக்கான கனோடியத் தூதுவரும் சந்திப்பில் கலந்து கொண்டார்.