ஊடகங்கள் நம்பகத்தன்மையானதும் நடுநிலையானதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் – ஊடகத்துறை அமைச்சர்

4433 18

Screen-Shot-2015-09-14-at-3.56.31-PMநம்பகத்தன்மையானதும் மற்றும் நடுநிலையான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே சகல ஊடகங்களினதும் பொறுப்பு என்று, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

மக்களை முன்நோக்கி அழைத்து செல்லும் ஊடகவியலாளர்களே இன்று நாட்டுக்கு தேவையாக இருக்கின்றனர்.

நாட்டு மக்கள் தற்போது சரியான தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

சரியான தகவல்களையே ஊடகங்கள் வாயிலாக அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே நடுநிலையானதும், நம்பகத்தன்மையானதுமான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களிடம் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment