போர்க் குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காதென்பதை வடக்கு முதலமைச்சர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பிரிட்டனின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சரும், பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதி பரனோஸ் ஏன்லியை சந்தித்த பின் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.