பிரிட்டனின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சரும் மற்றும் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதியும், பெண்கள் விவகாரம் சார்ந்தவருமான பரனோஸ் ஏன்லி வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்தார்.
நேற்றையதினம் இலங்கைக்கு வருகைதந்த என்லி எதிர்வரும் புதன்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்றும், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவிர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரிட்டன் அமைச்சர் வடக்கு மாகாண முதலமைச்சர், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள், மற்றும் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள பெண்கள் மற்றும் சிறுவர் குற்றங்களைக் கையாளுகின்ற பொலிஸ் நிலையத்திற்கும் சென்று பார்வையிட்டதுடன் பொலிஸ் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.
இவர் மனித உரிமைகள், ஐனநாயகத்தைப் பலப்படுத்தல், நல்லிணக்கத்தை எற்படுத்தல், ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்பில் அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.