அரசாங்கம் பிழையான பாதையில் நகர்கின்றது- சான் விக்ரமசிங்க

344 0

shan-wickramasingheஅரசாங்கம் பிழையான பாதையில் நகர்வதாக பிரதமர் ரணிலின் சகோதரரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் உரிமையாளருமான சான் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தாம், தமது சகோதரரிடம் ஏற்கனவே கூறியுள்ளதாகவும்  அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நிறுனத்திற்காக அரசாங்கத்திடம் எவ்வித சலுகைகளையும் தாம் எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையின் தொலைக்காட்சி ஊடகம் இலக்கு இன்றி பயணிப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் சான் விக்ரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது. 1979ம் ஆண்டு சுயாதீன தொலைக்காட்சியை ஆரம்பித்த சான் விக்ரமசிங்கவிடமிருந்து, அரசாங்கம் அந்த அலைவரிசையை பறிமுதல் செய்திருந்தது.