புதிய அரசியல் கட்சிக்கு ஆதரளிக்கப்படாது – கூட்டு எதிர்க்கட்சி

309 0

dinesh-gunawardanaமுன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தவிசாளராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு ஆதரவளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் உறுப்பினர்கள் இந்தப் புதிய கட்சிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1ம் திகதி இந்தக் கட்சி பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.