இலங்கை அரசாங்கம தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுகிறது – சுரேஷ்

2765 18

141206164716_suresh_premachandran_eprlf_tna_lanka_tamil_sri_lanka_640x360_bbc_nocreditதமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளாது, காலம் தாழ்த்தும் நுட்பத்தை அரசாங்கம் பின்பற்றுவதாக, ஜெனீவாவில் இடம்பெறும் 32வது மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
எனினும் இதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்திருந்தார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், அரசாங்கம் ஏமாற்று வழிகளையே பின்பற்றுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a comment