அமெரிக்க ஒக்லஹோமா மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ரிட்சர் அளவில் பதிவாகியுள்ள நில அதிர்வு காரணமாக உயிரிழப்புக்களோ அல்லது காயங்களோ எவருக்கும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அதிகஅளவில் இந்த பிரதேசத்தில் இடம்பெற்று வரும் நிலையில், நில அதிர்வுகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு மற்றும் எரிபொருட்களை அகழ்ந்து எடுப்பதற்காக நிலத்திற்கு அடியில் உள்ள பாறைகளை நோக்கி அதிக அழுத்தத்தில் நீரை பீச்சி அடிப்பதன் காரணமாகவே பிரதேசத்தில் நில அதிர்வுகள் இடம்பெறுவதற்கான காரணமாக இருக்கலாம் என புவியியல் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.