யாழ் சிறுபிட்டி கொலை – 14 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

302 0

19398822jailயாழ்ப்பாணம் – சிறுபிட்டி பகுதியில் இரண்டு இளைஞர்கள் கைதின் பின்னர் மரணித்த சம்பவம் தொடர்பில் கைதான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி மட்டுவில் வடக்கைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைதானதன் பின்னர் காணாமல் போயினர்.

அவர்கள் கொலையுண்டனர் என்ற அடிப்படையில் 16 இராணுவத்தினர் கடந்த 1998ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுக்கப்பட்டனர்.

அதனை அடுத்து வழக்கு விசாரணை இடம்பெறவில்லை.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இது தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.