தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.
அதன் பொது செயலாளர் வீ. ஆனந்தசங்கரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபுணர்கள் குழு, இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. ப்ளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி இருந்தது.
இது தொடர்பில் ஆனந்தசங்கரி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
2004ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் 22 ஆசனங்களைக் கைப்பற்றியது.
இது ஜனநாயக ரீதியாக வெற்றிப் பெற்றவை இல்லை என்று ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.
எனவே புதிதாக ஐரோப்பிய ஒன்றியம் நிபுணர்கள் குழு ஒன்றை அனுப்பி, விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளின் பின்புலம் இல்லாதவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வழி செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.