இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் பரோனெஸ் ஏன்லே இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது அவர் வடக்கில் இடம்பெறும் கண்ணி வெடி அகற்றல் பணிகளுக்காக 1.2 மில்லியன் பவுண்களை நிதியாக வழங்கப்படும் என்பதை உறுதிப்படுததியுள்ளார்.
இது பிரித்தானியா அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 6.6 மில்லியன் பவுண் நிதியில் ஒரு பகுதியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் அவர் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்திருந்தார்.