கிளிநொச்சியில் கேரள கஞ்சா

318 0

killlகிளிநொச்சி தர்மபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது 100 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் சுண்டிக்குளம் பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக தர்மபுரம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உந்துருளியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த ஒருவர் கடற்படையினரை கண்டதும் அதே இடத்தில் தாம் கொண்டு சென்ற பொதியை வீசி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த பொருளை கைப்பற்றிய கடற்படையினர் அதனை சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தநிலையில் தப்பிச்சென்ற உந்துருளியில் சென்றவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.