வடக்கில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்

315 0

4_n_sri_kanthaயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைகள் உட்பட்ட விடயங்களை முன்னிறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த யாழ்ப்பாணத்தில் கூடிய ஏழு தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

யாழ்ப்பாண நிலைமைகளை ஆராயும் முகமாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையில் ஏழு தமிழ்க்கட்சிகள், யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடலை நேற்று நடத்தின.

வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

தமிழர் தரப்பு கட்சிகளான இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஏழு கட்சிகளும் இதில் பங்கேற்றன.

இந்தநிலையில் ஆராய்வின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

அத்துடன் குறித்த ஏழுக்கட்சிகளும் யாழ்ப்பாணத்தின் நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திப்பது என்றும் இதன்போது முடிவெடுக்கப்பட்டதாக ஸ்ரீகாந்தா குறிப்பிட்டார்.