ஹிலாரியின் மின்னஞ்சல்களில் குற்றங்களுக்கான சாட்சியங்கள் இல்லை – எப்.பி.ஐ

316 0

fbi-norfolk-street-cambridge-415x260அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிங்டனின் மின்னஞ்சல்களில் எவ்வித குற்றங்களுக்கான சாட்சியங்களையும் கண்டறியவில்லை என்று அமெரிக்க புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவையான எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒருநாள் இருக்கும்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எப்.பி.ஐயின் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி இதனை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரகசியமான பல ஆவணங்கள், அமரிக்க ராஜாங்க செயலாளராக இருந்த ஹிலாரி கிளிங்டனின், தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து கண்டறியப்பட்டன.

இதனை அமெரிக்காவின் எதிர்த்தரப்பு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் குற்றச்சாட்டாக முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.