இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் சித்திரவதைககள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.
பாதுகாப்பு பிரிவுகளில் மீளமைப்புக்களை மேற்கொள்ளவேண்டுமானால் அரசாங்கம், காவல்துறை துஸ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
இல்லையெனின் புதிதாக கொண்டு வரப்படும் தீவிரவாத எதிர்ப்பு உத்தேச சட்டமூலத்தின் மூலம் இந்த துஸ்பிரயோகங்கள் விரிவுப்படுத்தப்படும் என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவமும் பொதுமக்களின் போராட்டம் இல்லையெனில் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியநிலைப்பணிப்பாளர் பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.