கோப் அறிக்கை- சுதந்திரக் கட்சி நிபுணர்களை கொண்டு ஆராய்கிறது

311 0

wdj-senevirathne1மத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பான கோப் அறிக்கை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, நிபுணர்களை கொண்டு ஆராய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

அமைச்சர் ஜோன் செனவிரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்வுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கடந்த 31ஆம் குழு ஒன்றை அமைத்தது.

இந்தக்குழு தமது இறுதியறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது.

இந்தநிலையில் குறித்த குழு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் இந்தவாரம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.