விமல் வீரவன்சவிடம் இன்றும் விசாரணை

285 0

wimal-weerawansa-1தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிமோசடி தடுப்பு காவல்துறை பிரிவில் முன்னிலையானார்.

இன்று காலை அவர் நிதிமோசடிக்கு எதிரான காவல்துறைப்பிரிவில் முன்னிலையானார்.

தாம் பொறியியல் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சராக இருந்தபோது அரசுக்கு சொந்தமான 40 வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கும் வகையிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளபட்டுள்ளது.

இதேவேளை அரச வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவின் விளக்கமறியல் காலம் நவம்பர் 16வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதிமன்றம் இந்த நீடிப்பை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் குற்றச்சாட்டின்பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரட்ன இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.