ஈராக்கின் இரண்டு நகரங்களில் நோயாளர் காவு வண்டிகளை கொண்டு சோதனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈராக்கின் திக்ரிக் மற்றும் சமாரா ஆகிய நகரங்களிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
திக்ரித் நகரின் நுழைவு வாயிலில் உள்ள சோதனைச்சாவடி அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 மாணவிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 25க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, சமாரா நகரின் அல்-அஸ்கரி மசூதி அருகே ஷியா யாத்திரிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.