மன்னார் – சவுத்பார் பிரதேச கடற்பகுதியில் சட்டவிரோதமாக முறையில் வெடிப்பொருட்கள் சிலவற்றை வைத்திருந்த 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் பயன்படுத்திய படகுகள், சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் வெடிப்மருந்தும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 550 கிலோகிராம் மீன் தொகையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, களுவாஞ்சிகுடியில் உள்ள மதுபான சாலை ஒன்றில் போலி நாணயத்தாளுடன் மதுபானம் கொள்வனவுசெய்ய முயற்சித்த இரண்டுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள், தொடர்ச்சியாக பல தடவைகள் இவ்வாறு போலி நாணயத்தாள்களை கொடுத்து மதுபானம் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.