மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவுடன் தற்போதைய அரசாங்கத்தின் ஊழல்தாரர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
ஜாஎல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இந்த கருத்தை வெளியிட்டார்.
அத்துடன் வெட் வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது பொருட்களின் விலைகள் அதிகரிப்பதை அவதானிக்க முடியும் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.