யுத்தத்தினால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் அகதிச் சிறுவர்கள் சிலர் கல்வி கற்பதற்கான வசதிகள் இன்றி அல்லலுருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகதி மாணவர்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றினால் 30 மாணவர்களும், 21 மாணவிகளும் பராமரிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்த நிறுவனத்தினால் மாணவர்களுக்கான கல்வி மற்றும் தங்குமிட வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த தொண்டு நிறுவனம் நிதி வசதிகள் இன்றி நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி நெருக்கடியின் காரணமாக குறித்த தொண்டு நிறுவனம் பெங்களுரில் இருந்து அச்சரவாக்கத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.