வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் நின்ற பல நூறு கால் நடைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பின்பே பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தைரிவிக்கின்றனர்.
வலி. வடக்கின் சில பகுதிகள் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பல நூறு ல்நடைகள் தங்கி வாழ்ந்துள்ளமைக்கான அடையாளங்களும் கால் தடங்களும் கானப்படுவதாகவும். இவை தாம் யுத்தம் ஆரம்பித்தவேளையில் 1990ம் ஆண்டில் இப்பகுதியில் கைவிட்டுச் சென்றவைகள்.
எமது பகுதியில் இவ்வளவு காலம் குந்தியிருந்த இராணுவத்தினர். பிரதேசங்களை கைவிட்டுச் செல்லும்போது இருப்பிடங்களை அழித்தும், சொத்துக்களை அபகரித்துச் சென்றதும் இல்லாமல் எமது வாழ்வாதார கால் நடைகளையாவது விட்டுச் செல்வார்கள் என எதிர்பார்த்தோம் அவற்றினை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு சென்ற பின்பே வெற்றுத்தரைகளை விடுவித்துள்ளனர்.
எமது பிரதேசத்தில் இருந்து 1990ம் ஆண்டு அவசர அவசரமாக வெளியேறும்போது 200ற்கும் மேற்பட்ட மாடுகளும் 300 வரையான ஆடுகளையும் கைவிட்டே சென்றோம். 26 ஆண்டுகள் கழித்து அவை எந்தளவில் பல்கிப் பெருகியிருக்க வேண்டும். ஆனால் அவற்றினை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் மனோ நிலையில்படையினர் இல்லை என்றே தோன்றுகின்றது.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அதிக இடங்களில் மாட்டு எருக்களும், பல இடங்களில் மாடுகளின் கால் தடங்களும் தெளிவாகத் தெரிவதன் மூலம் நிலம் விடுவிக்கப்பட்ட அன்றே கால் நடைகளை படையினர் தமது பகுதிக்கு கடத்தியுள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. எனவே அனைத்தும் அழிக்கப்பட்டு வெட்டை வெளிகளை எம்மிடம் ஒப்படைக்கும் படையினர் எமது கால் நடைகளையும் ஒப்படைக்க முன் வரவேண்ணும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.