உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் எழுவருக்கும், நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றும் உதவி பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான எஸ். சமூத்திரஜூவ, ஆர்.எச்.எஸ். மாசிங்க, பீ.பீ. ஜயகொடி, கே.பி. கீர்த்திரத்ன, ஏ.பீ.டீ. வீரசேகர ஓ. ஏவாவிதாரன மற்றும் பி.எம்.கே.டி. பலிஸ்கார ஆகிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கும் மேலதிகமாக பொலிஸ் அதிகாரிகளான எம்.சீ. சோமசிங்க, ஜி.எச். பிரசாந்தா, டி.எஸ். விக்ரமசிங்க, பி.என். ரத்நாயக்க ஆகியோர் இடமாற்றம் பெற்றுள்ளனர்.
மேலும் எம்.சி. சோமசிங்க மற்றும் எஸ்.ஜி. சதரசிங்க ஆகிய உதவி பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.