நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் கொழும்பு குற்றவியல் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொண்டுள்ளது.
நீதிபதியிடம் நேற்று (19) பிற்பகல் 5 மணித்தியாலம் வரை வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் உத்தரவிற்கமையவே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுடன் சர்ச்சைக்குரிய வகையில் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து உரையாற்றியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் கொழும்பு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி எம். ரணவக்க மற்றும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா ஹேமபால ஆகியோரிடமும் கொழும்பு குற்றவியல் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துக் கொள்ளவுள்ளது.
சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து மேற்குறிப்பிட்ட நீதிபதிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கொழும்பு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் தம்புல டி லிவேரா கடந்த 16 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.