கிளிநொச்சி மாவட்டம் சுண்டிக்குள கடற்கரைப் பிரதேசத்தில் இன்று காலை தர்மபுரக் காவல்துறையினர் 100 கிலோகிராம் கஞ்சாப் பொதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இன்று அதிகாலை சுண்டிக்குள கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக தர்மபுரம் காவல்துறையினருக்கு இரகசிய அழைப்பொன்று கிடைத்ததையடுத்து அவர்கள் அங்கே விரைந்தபோது, காவல்துறையினரை அவதானித்த கடத்தல் காரர்கள் படகில் கஞ்சாவை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இருப்பினும் இரண்டு நபர்கள் உந்துருளியில் 30கிலோகிராம் கஞ்சாவை கடத்திச்சென்றபோது கடற்படையினர் சுற்றிவளைத்தபோது அவர்களும் கஞ்சாப் பொதிகளை விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது கடற்படையினரால் மீட்கப்பட்ட 30கிலோகிராம் கஞ்சாவும், படகிலிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 72கிலோகிராம் கஞ்சாவையும் சேர்த்து 102கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்னும் சில நாட்களில் கைதுசெய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.