மாணிக்க கங்கையில் நிர்வாணமாக நீராடிய 34 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் பெரும்பாலானோர் போதையில் இருந்தாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இவர்கள் கதிர்காமம் தங்குமிடம் ஒன்றில் இருந்து மாணிக்க கங்கையில் நீராட வந்துள்ளனர்.
இவர்களது நடவடிக்கைக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதில் சிலர் காயமடைந்துள்ளனர். சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.