அண்ணனிடம் உள்ள அதிகாரங்களை தம்பி எடுத்துக் கொள்வதற்காகவே அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற அஜித் மன்னப்பெரும குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் ராஜபக்ஷர்களின் குடும்ப பிரச்சினையை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் 19 ஆவது திருத்தத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவை நாட்டுக்கு இல்லை.
ஜனநாயக ஆட்சியை விரும்புகிறவர்கள் ஒரு போதும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.