கழிவு எண்ணை பிரச்சினையை மூடி மறைக்க மாவை எம்.பிக்கு பல கோடிகள் கைமாற்றப்பட்டது -ஆதாரம் உள்ளது என்கிறார் டக்ளஸ்-

344 0

14907181_1484997518182267_179534035377031288_nசுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள நிலத்தடி நீருடன் கழிவு எண்ணை கலக்கப்பட்ட விடயத்தினை மூடி மறைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா பல கோடி ரூபாவினை நெதேன் பவர் மின்சார உற்பத்தி நிலையத்திடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.
இதற்கான சகல ஆதாரங்களும் என்னிடம் உள்ளது என்று ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை நண்பகல் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சுன்னாகத்தில் உள்ள நெதேன் பவர் மின் உற்பத்தி நிலையத்தினால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட கழிவு எண்ணை அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீருடன் கலந்துள்ளது.
இனால் சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் தமது கிணறுகளில் உள்ள நீரினை பருகுவதை நிறுத்தி, பிரதேச சபைகளினால் பௌசர்களின் வழங்கப்படும், நீரினையே பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு யாழ்.மண்ணிற்கு பாதகத்தினை விளைவிக்கக் கூடிய அந்த மின் உற்பத்தி நிலையத்தினை சுன்னாகத்தில் அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்று உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இப் பேச்சுவார்த்தைக்காக அவ் மின் உற்பத்தி நிறுவனத்தினால் பெரும் தொகை பணம் மாவை எம்.பிக்கு கைமாற்றப்பட்டது.
இதன் பின்னர் தற்போது எழுந்துள்ள கழிவு எண்ணை விடயத்திதைன மூடி மறைப்பதற்கும் அந்நிறுவனத்தினால் பெரும் தொகை பணம் மாவை எம்.பிக்கு கைமாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவை எம்.பிக்கு பெரும் தொகை பணம் கைமாற்றப்பட்டமை தொடர்பில் சகல ஆதாரங்களும் என்னிடம் உள்ளது என்றார்.